Close
நவம்பர் 26, 2026 7:45 மணி

பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை தயாரிப்பு தேதியை பிப்ரவரி வரை நீட்டிக்க கொமதேக கோரிக்கை

பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை தயாரிப்பு இறுதி தேதியை வரும் பிப்ரவரி 28 வரை நீட்டிக்க வேண்டும் என கொமதேக, தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு பொங்கலுக்கு வழங்கும் இலவச வேட்டி, சேலை திட்டம், பொதுமக்களுக்காகவும், கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் துவங்கப்பட்டது. ஜூன் மாதத்திற்கு முன்பாக இந்த திட்டத்திற்கு தேவையான நூலுக்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டால்தான் சரியான நேரத்தில் பொங்கல் விழாவின்பொபோது அனைத்து மக்களுக்கும் ரேஷன் கடைகளின் மூலமாக இலவச வேட்டி சேலை கொடுக்க முடியும்.

இந்த ஆண்டு புதிய அரசு அமைந்த பின்னர் நூலை கொள்முதல் செய்கின்ற ஒப்பந்தப்புள்ளி வெகு தாமதமாக கோரப்பட்டது. மேலும், புதிய ரகத்திற்கான தயாரிப்புக் கூலி முடிவு செய்வதிலும் மிக தாமதம் ஏற்பட்டது. இந்த காரணங்களினால் மிக தாமதமாக தயாரிப்பு பணிகள் துவங்கின.

வருகின்ற டிசம்பர் மாதம் இறுதிக்குள் இலவச வேட்டி, சேலைகள் முழுமையாக தயாரிக்க முடியாது. தற்போது உள்ள சூழலில் 60 சதவீத வேட்டி, சேலைகள் தான் டிசம்பர் இறுதிக்குள் தயாரிக்க முடியும். முழுமையாக தயாரிப்பை நிறைவு செய்ய பிப்ரவரி இறுதியாகிவிடும். அதனால் டிசம்பர் 15 என்று அறிவிக்கப்பட்டுள்ள உற்பத்தி நிறைவு தேதியை, பிப்ரவரி 28 ஆக நீட்டிக்க வேண்டும்.

தற்போது அரசு கைத்தறி, விசைத்தறியை தாண்டி ஆட்டோ தறிகளிலும், வெளிமாநிலங்களில் உள்ள தறிகளிலும் தயாரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக அறிகிறோம். இது நடந்தால் தமிழக கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தை பெரிதளவு பாதிக்கும். எனவே அதை கைவிட்டு, தரமான வேட்டி, சேலைகளை தயாரித்து வழங்குவதற்கு தயாரிப்பு நிறைவு தேதியை, பிப்ரவரி 28 வரை நீட்டிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட விசைத்தறி சங்க பொறுப்பாளர்களை அழைத்து கைத்தறித்துறை அமைச்சர் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top