Close
நவம்பர் 29, 2026 5:35 மணி

நாமக்கல் மாநகராட்சியில் இருந்து 5,154 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைப்பு

நாமக்கல் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகளை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முறையாக பிரித்தெடுத்து, மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தும் வகையில் தனியார் சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் லாரிகள் மூலம் மொத்தம் 798 ட்ரிப், 5,154 டன் எடையிலான பிளாஸ்டிக் கழிவுகள் தனியார்சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் கழிவுகளில் இருந்து, மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகள் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு, உரிய முறையில் துண்டாக்கப்பட்டு, தனியார் சிமென்ட் தொழிற்சாலைக்கு மாற்று எரிபொருளாகப் பயன்படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

இவ்வாறு அனுப்பப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் தொழிற்சாலையில் உள்ள சூளைகளில் மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுதல், எரித்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அகற்றுதல் போன்றவற்றைத் தவிர்த்து, அறிவியல் பூர்வமான கழிவு மேலாண்மை முறையில் கையாள்வதன் மூலம், நகரின் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top