Close
அக்டோபர் 1, 2026 7:36 மணி

மதுராந்தகத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆ கி ய தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் பரந்தாமனை ஆதரித்து திமுகவினர் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் திருவண்ணாமலைசட்டமன்ற உறுப்பினரும் திமுக கழக கொறடாவுமான எ.வ.வேலு தலைமையில் திமுகவினர் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து தேர்தல் பொறுப்பாளர்கள் கோவிந்தன், சுந்தரபாண்டியன் தலைமையில் தமிழ்நாடு அனைத்து அமைப்புசாரா தொமுச மாநில பிரச்சார செயலாளர் ஆறுமுகம் முடி திருத்தும் தொழிலாளர்களிடம் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

தமிழ்நாடு அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் உட்பிரிவான 158 பிரிவுகளின் கீழ் வரும் தொழிலாளர்கள் அனைவரிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கட்டுமான தொழிலாளர்கள், நடை பாதை வியாபாரிகள், முடி திருத்தும் தொழிலாளர்கள், டைலர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களிடம் நேரடியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

வாக்கு சேகரிப்பின் போது முடி திருத்தம் தொழிலாளியிடம் தமிழ்நாடு அனைத்து அமைப்புசாரா தொமுச மாநில பிரச்சார செயலாளர் ஆறுமுகம் முகசவரம் செய்து நூதன முறையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் கிரிக்கெட் ரவி, எழில்மாறன், சீனிவாசன், முருகையன், ஊராட்சி மன்ற தலைவர் சிவா, கிளைச் செயலாளர் சம்பத் ஆர். கிருஷ்ணமூர்த்தி, மூர்த்தி மற்றும் அன்னங்கால், ராஜபாளையம் பொதுமக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top