Close
அக்டோபர் 1, 2026 7:37 மணி

கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்: வருவாய் ஆய்வாளர் கைது

நாமக்கல் அருகே, கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் ஒருவரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல் அடுத்த அலங்காநத்தம் பிர்கா, வருவாய் ஆய்வாளராக ஜெயராமன் (40) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் அப்பகுதி மக்கள் அங்குள்ள கோயில் ஆக்கிரமிப்பை அகற்றித் தரும்படி மனு அளித்துள்ளனர்.

அதன்பேரில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. இச்சூழலில் ஆக்கிரமிப்பு அகற்றியதற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்கும்படி வருவாய் ஆய்வாளர் ஜெயராமன் கேட்டுள்ளார். அத்தொகையை வழங்க மனமில்லாத அலங்காநத்தத்தை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் இதுதொடர்பாக நாமக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் செய்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை அறிவுறுத்தலின்பேரில், ரசாயன பவுடர் தடவிய ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பணத்தை அலங்காநத்தம் அலுவலகத்தில் இருந்த வருவாய் ஆய்வாளர் ஜெயராமனிடம், சந்திரசேகரன் வழங்கினார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருவாய் ஆய்வாளர் ஜெயராமனை சுற்றி வளைத்து கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆக்கிரமிப்பு அகற்றியதற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் வருவாய் துறை ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top