Close
அக்டோபர் 3, 2026 9:25 மணி

சோழவந்தான் விக்கிரமங்கலம் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் விக்கிரமங்கலம் பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வாடிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட மன்னாடிமங்கலம், முள்ளிப் பள்ளம், குருவித்துறை, தென்கரை, காடுபட்டி, மேலக்கால் ஆகிய ஊராட்சிகளிலும் செல்லப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட விக்கிரமங்கலம், முதலைக்குளம் ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது

முதலைக்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் பாண்டி அறிக்கை வாசித்தார். செல்லம்பட்டி ஒன்றிய அலுவலக பணியாளர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  விக்கிரமங்கலம் கீழப்பட்டி சாலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சமணர் மலை அருகில் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மலை அடிவாரத்தில் உள்ள மதுபான கடையில் மது பிரியர்கள் மது குடித்துவிட்டு பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

விக்கிரமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார் குற்றாலம் நடராஜன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய பட்டாசுகள் வெடிக்க தடை விதிப்பது, கூம்பு வடிவ ஒலிபெருக்கி அமைப்பதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

மன்னாடிமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் திருச்செந்தில் அறிக்கை வாசித்தார். வாடிப்பட்டி வட்டார அலுவலகத்தில் இருந்து பற்றாளர் ஜெயக்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் சாலை குடிநீர் தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மன்னாடிமங்கலம் அரசு மருத்துவமனையில் தினசரி சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது குறித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர். சின்ன மாயன் அறிக்கை வாசித்தார். இதில் முள்ளிபள்ளம் சங்கையா கோவில் முதல் விநாயகபுரம் காலனி வரை சாலைகளை அகலப்படுத்தி சேதமடைந்த சாலையை சீரமைக்க அரசை கேட்டுக் கொள்வது மற்றும் சுத்தமான குடிநீர் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தென்கரை ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் முனிராஜ் அறிக்கை வாசித்தார். தென்கரை, ஊத்துக்குளி புதூர், நாராயணபுரம், மலைப்பட்டி, மேலமட்டையான் ஆகிய கிராமங்களில் தெருவிளக்குகள் குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குருவித்துறை ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் அறிக்கை வாசித்தார். குருவித்துறை சித்தாதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலக்கால் ஊராட்சி சார்பில் கீழ மட்டையான் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் ஒய்யனன் அறிக்கை வாசித்தார். மேலக்கால் கச்சிராயிருப்பு கீழ மட்டையான் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். வைகை ஆற்றிற்கு செல்லும் சாலையை சீரமைப்பது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெரு விளக்குகளை சீரமைப்பது தடையின்றி குடிநீர் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

காடுபட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் மகாராஜன் அறிக்கை வாசித்தார். இதில் பற்றாளர் சுதா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆதிதிராவிடர் காலனியில் பேவர் பிளாக் அமைப்பது அமைத்துக் கொடுப்பது குடிநீர் வசதி தெருவிளக்குகள் ஏற்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காடுபட்டி வடகாடு பட்டி புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top