Close
அக்டோபர் 19, 2026 11:44 காலை

அரசின் நலத்திட்டங்களால் ஒருவருக்கு பலன், மற்றொருவருக்கு பாதிப்பா?: டாக்டர் பாஸ்கரன் கண்டிப்பு

அண்ணாமலையுடன் தேனி டாக்டர் பாஸ்கரன்

செய்தியாளர்: மா.பாண்டியராஜ்.

அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தும் போது, ‘ஒருவருக்கு பாதிப்பு மற்றவருக்கு பலன்’ என்ற நடைமுறையை மாற்ற வேண்டும். யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என தேனி டாக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலரும், அரசியல் விமர்சகரும், சிறப்பு வாய்ந்த பல் மருத்துவ நிபுணருமான டாக்டர் பாஸ்கரன் இது குறித்து கூறியதாவது: பெண்களுக்கு இலவச பேருந்து வசதி கொடுத்தது அரசை பொறுத்தவரை மிகவும் நல்ல திட்டமாக தெரியலாம். ஆனால் அந்த திட்டத்தால் பல பெரிய சமூக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

பேருந்து பயணம் இலவசம் என்பதால், எந்த நேரமும் எங்கும் இலவசமாக சென்று வரலாம். குறிப்பாக நீண்ட துார பேருந்துகளில் மட்டும் இந்த நடைமுறை இல்லை. மற்றபடி அரசு 160 கி.மீ., வரை பெண்கள் இலவசமாக பயணிக்க முடியும் என்ற நடைமுறையினை கொண்டு வந்துள்ளது. அதுவும் பெண்கள் வரம்பின்றி எத்தனை முறை வேண்டுமானாலும், இந்த தூரத்திற்குள் பயணிக்க முடியும்.

இதனால் உள்ளூர் கிராமம், பேரூராட்சி போன்ற மாதிரி சிறிய நகர ஊராட்சிகளில் வியாபாரமும் அடியோடு வீழ்ந்து விட்டது. பெண்கள் கருவேப்பிலை, கொத்தமல்லித்தழை, மிளகு, சீரகம், உப்பு வாங்க கூட பக்கத்தில் உள்ள பெரிய நகர் பகுதிக்கு சென்று விடுகின்றனர்.

அதே மாதிரி ஒட்டல்ல சாப்பிடவும், துணிகள் வாங்கவும், பேனா, பென்சில், நோட்டுகள் உட்பட சில பொருட்கள் வாங்கவும் கூட பக்கத்து ஊருக்கு செல்கின்றனர். ஏன் சினிமா பார்க்க செல்பவர்கள் கூட இலவச பேருந்து வசதியை பயன்படுத்தி நகர்பகுதிக்கு செல்கின்றனர்.

ஜெயிலர் 2 சினிமாவிற்கு அதிகளவில் கூட்டம் வர இலவச பேருந்தும் முக்கிய காரணம். அதுவும் தமிழ்நாட்டுல 24 மணி நேரமும் பேருந்து வசதி இருக்கிறது. இது ரொம்பவும் வசதியா போய் விட்டது. பக்கத்து டவுனுக்கு போயி.. தேவையான எல்லாத்தையும் வாங்கிட்டு வந்திர்றாங்க. இதனால உள்ளூர் வியாபாரமே சரிந்து நொறுங்கிப்போய் விட்டது.

உள்ளூர் சினிமா தியேட்டர்கள், ஓட்டல்கள், பலசரக்கு கடைகள், ஜவுளி கடைகள்னு எல்லாமும் மூட வேண்டிய நிலை வந்திருச்சு… குறிப்பாக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் . பெண்களுக்கு ஆட்டோ இலவசம்னு போர்டு போட்டு, கூவிக்கூவி ஆட்டு ஓட்டுறாங்க…

பெண்களுக்கு ஆட்டோ… இலவசம்… வாங்கம்மா… வாங்க… ஆட்டோ சவாரி இலவசம்னு கூவுறாங்களாம். அவுங்க வயித்தெறிச்சல்ல கூவுறத பார்த்து சில பெண்களே சங்கடத்துடன் ஏறி பயணம் பண்றாங்களாம். அவங்க கிட்ட இவ்வளவு தான் வேணும்னு கேட்காம… நீங்க குடுக்குறத, குடுங்க தாயீ… எங்க பொழப்புல முதல்வர் மண் அள்ளிப்போட்டுட்டாருனு, நீங்க குடுக்கிற இந்த கொஞ்சம் காசுல தான் எங்க வீட்டுல அடுப்பு பத்த வைக்கனும்னு, ஆட்டோக்காரங்க கண்ணீர் வடிக்கிறாங்க.

ஒரு இலவச திட்டத்தை செயல்படுத்துறதுக்கு முன்னாடி அதனால என்னென்ன பாதிப்பு வரும்னு தெரியாம… சினிமா பாணியில கிளாப்ஸ் வாங்க திட்டங்களை செயல்படுத்தினா இப்படித்தான். ஏற்கனவே மினி பேருந்து விட்டதுல ஆட்டோவுக்கு பயங்கர பாதிப்பு. அடுத்து முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் இலவச பஸ் விட்டாரு. அதுலயே ஆட்டோக்காரங்க பொழைப்பு பாதி முடிஞ்சிருச்சு.

இப்ப முதல்வர் மிக நீண்ட துார பேருந்து போக எல்லா பேருந்துகளிலும் இலவசம்னு சொல்லி, ஆட்டோக்காரங்க, சின்ன வியாபாரிங்க எல்லாரோட பிழைப்பையும் முடிச்சிட்டாங்க… குறிப்பா போக்குவரத்துக்கழகத்தையும் முடிச்சிட்டாங்க… போக்குவரத்துக் கழகங்கள் அழிந்து வருகிறது என்ற செய்தி இன்னும் கொஞ்ச நாளில் வந்திரும்.

இலவச பேருந்து வேண்டாம் என நான் சொல்லவில்லை. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு நுாறு சதவீதம் இலவசம்னு குடுக்கலாம். மற்றவர்களுக்கு கட்டண குறைப்பு மூலமாவது சலுகை பண்ணலாம். முழுமையான இலவசம்  என்பது ஏற்கதக்கது இல்லை.

தவிர இந்த அரசு பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கு என எந்த திட்டத்தையும் செயல்படுத்தல. அவங்களுக்கும் கடன் தள்ளுபடி, புதுக்கடன்னு சொல்லி, பணம் கொடுத்து ஏமாத்துற வேலையத்தான் பார்க்கின்றனர். மாறாக… விவசாய உள் கட்டமைப்புகளை பலப்படுத்துதல், நீர் வளத்தை அதிகரித்தல், உரங்களுக்கு விலையை குறைத்தல், விவசாய பணிகளுக்கு ஊக்கம் அளித்தல், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க உதவி செய்தல் போன்ற எந்த பணிகளும் நடக்கவில்லை.

தவெக அரசு சொல்லி ஒரு பணிகள் கூட நடந்ததாக தெரியவில்லை. மக்கள் எதிர்பார்ப்பது ஊழல் இல்லாத ஆட்சி. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் ஊழலின் வடிவம், அதாவது பணம் வாங்கும் முறைகள் மாறி விட்டதே தவிர ஊழல் குறையவில்லை.

ஆளும் கட்சியினர் மீதே தற்போது ஊழல் புகார்கள் உருவாக தொடங்கி விட்டன. புது முகங்கள் என வர்ணிக்கப்படும் தவெகவினரும் அதிகளவில் தவறுகளை செய்கின்றனர். ஒரே நாளில் மாற்றம் என்பது முடியாதது தான். ஆனால் இந்த அரசிடம் மாற்றம் எப்படி தொடங்கியிருக்கிறது, எங்கு தொடங்கியிருக்கிறது என்ற விவரங்கள் தெரியவில்லை.

மக்களுக்கு நல்லது செய்யும் போது, ஒருவருக்கு பலன், ஒருவருக்கு பாதிப்பு என்ற சிஸ்டத்தை கை விட வேண்டும். யாருக்கும் பாதிப்பு இல்லாத, எல்லோருக்கும் பலனளிக்கும் திட்டங்களை அரசு தெளிவாக செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top