Close
அக்டோபர் 28, 2026 2:19 மணி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸ் டிஎஸ்பி சுபாஷினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவியர் ஊழலை வேரோடு அறுக்க முன்வர வேண்டும் எனவும், எந்த சூழ்நிலையிலும் லஞ்சம் கொடுக்கக் கூடாது எனவும், ஊழலை எதிர்க்கும் தைரியத்தை மாணவ மாணவியர் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட வார்த்தை ஜாலங்கள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டின் கருப்பொருளான செழிப்புக்கான நேர்மை என்ற தலைப்பில் மாணவ மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து ஊழலுக்கு எதிரான உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு எஸ்எஸ்ஐ பெரியசாமி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வெஸ்லி செய்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top