Close
நவம்பர் 26, 2026 5:47 மணி

அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த திரை பிரபலங்கள்

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் ரமண மகரிஷி ஆசிரமங்களுக்கு  சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது

அதேபோல், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

உலக பிரசித்த பெற்ற அண்ணாமலையார் கோயிலுக்கு தனது இரு மகன்களுடன் வந்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார்.

அந்த வகையில் திருவண்ணாமலைக்கு வருகை தந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களான யாத்ரா, லிங்கா ஆகியோருடன் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக சம்பந்த விநாயகரை வணங்கி வழிபட்ட அவர், தொடர்ந்து உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாரை வழிபாடு செய்தனர். பின்னர் வைகுந்த வாயில் அருகே நின்று தீபமலையை வழிபட்டார். கோவில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்கள் மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கினர்.

நடிகர் ராகவா லாரன்ஸ், தனது பிறந்தநாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில், ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னதிக்குச் சென்று, அங்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக மற்றும் அர்ச்சனை வழிபாடுகளில் லாரன்ஸ் கலந்துகொண்டார். சிவாச்சாரியார்கள் மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து கிரிவலப் பாதையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், தனது தாயாருடன் சுவாமி தரிசனம் செய்தார். முதலில் செழிஞ்சுடர் விநாயகர் மற்றும் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் , மானசா தேவியை வணங்கி , உமா தேவியார் , குரு தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் ,  27 மகான்கள் சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார்.

தொடர்ந்து அவருக்கு ஆசிரம தலைவர் லாயர் சந்திரமோகன், பிரசாதம் மற்றும் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வழங்கினார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் பார்த்த பக்தர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரோடு நின்று செல்பி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினர். அவரும் அனைவரிடம் செல்பி புகைப்படத்திற்கு சிரித்தபடி நின்று போஸ் கொடுத்தார். இதனால் பக்தர்கள் மகிழ்ந்தனர்.

இரு மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top