திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 12-ம் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெறும். இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலம் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பர் மாதம் 24ம் தேதி தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலையில் வரும் 24ஆம் தேதி தீப தினத்தன்று மலை மீது ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை வடகிழக்கு பருவமழை தொடர்வதால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், பக்தர்கள் தீப மலையின் மீது ஏறி மகா தீபத்தை தரிசிக்க தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகா தீபம் ஏற்றப்படும் நவம்பர் 24-ம் தேதியன்று, தீபக் கொப்பரை, நெய் மற்றும் திரி கொண்டு செல்லும் கோயில் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு மட்டுமே மலை உச்சிக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும். மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றச் செல்லும் கோயில் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்புத் துறையினர் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
மாவட்ட நிர்வாகத்தின் தடையை மீறி அடர்ந்த காட்டுப் பகுதிகள் வழியாக மலையேற யாரேனும் முயற்சித்தால், வனப் பாதுகாப்புச் சட்டத்தின் படி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




