Close
நவம்பர் 26, 2026 5:35 மணி

மோகனூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

மோகனூர் அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர்  கலந்துகொண்டு, 177 பயனாளிகளுக்கு ரூ.61.90 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மோகனூர் தாலுகா, பரளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 177 பயனாளிகளுக்கு ரூ. 61.90 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: இன்றைய தினம் மக்கள் தொடர்பு திட்டம் முகாமில் அரசின் சார்பில் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அதனை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இதனை மக்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். மேலும் உங்களுக்கு எளிதாக புரியும் வகையில், என்னென்ன திட்டங்கள் உள்ளன, யார் யார் பயன்படுத்த முடியும், அரசு என்னென்ன உதவிகளை செய்து வருகிறது என்பதை விளக்கும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசின் திட்டங்களை அறிந்துகொண்டு அனைவரும் பயன்பெற வேண்டும்.

தமிழக அரசால் ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக டிஎன் வெற்றித்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வெற்றி வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

உங்களிடம் பட்டா இருந்து, வீடு இல்லை என்றால், உங்கள் ஊராட்சி செயலாளரை அணுகி அதற்கான மனுவை கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால், இந்த திட்டத்தில் நீங்கள் இலவசமாக வீடு பெற முடியும். இதற்காக தமிழ்நாடு அரசின் மூலம் ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top