Close
நவம்பர் 26, 2026 5:25 மணி

நாமக்கல் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளர்கள் 13.29 லட்சம் பேர்

நாமக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் 13 லட்சத்து, 29 ஆயிரத்து 376 வாக்காளர்கள் உள்ளனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (எஸ்டி), நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. வரைவு வாக்காளர் பட்டியலில் தொகுதிவாரியாக இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் விபரம்:

  • ராசிபுரம் (தனி): ஆண் வாக்காளர்கள் 1,08,936, பெண் வாக்காளர்கள் 1,14,135, மற்றவர்கள் 16. மொத்த வாக்காளர்கள் 2,23,087.
  • சேந்தமங்கலம் (எஸ்டி): ஆண்கள் 1,12,510, பெண்கள் 1,17,845, மற்றவர்கள் 27, மொத்த வாக்காளர்கள் 2,30,382.
  • நாமக்கல்: ஆண்கள் 1,14,830, பெண்கள் 1,24,005, மற்றவர்கள் 40, மொத்த வாக்காளர்கள் 2,38,875.
  • பரமத்திவேலூர்: ஆண்கள் 98,791, பெண்கள் 1,07,121, மற்றவர்கள் 10, மொத்த வாக்காளர்கள் 2,05,922.
  • திருச்செங்கோடு: ஆண்கள் 1,01,917, பெண்கள் 1,08,294, மற்றவர்கள் 49, மொத்த வாக்காளர்கள் 2,10,260.
  • குமாரபாளையம்: ஆண்கள் 1,06,526, பெண்கள் 1,14,251, மற்றவர்கள் 73, மொத்த வாக்காளர்கள் 2,20,850.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து ஆண்கள் 6,43,510, பெண்கள் 6,85,651, மற்றவர்கள் 215 என மொத்தம் 13,29,376 வாக்காளர்கள் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் தொடர்ச்சியாக, நவ. 12ம் தேதி முதல் டிச. 11ம் தேதி வரை கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் தெரிவிக்கலாம். இப்பணியின்போது, 1.1.2027 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களும், இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளாதவர்களும் படிவம்-6ல் விண்ணப்பிக்க வேண்டும்.

நீக்கம் தொடர்பாக படிவம்-7ல் விண்ணப்பிக்க வேண்டும். திருத்தங்கள் செய்ய விரும்புவர்களும் படிவம்-8ல் விண்ணப்பங்களை தொடர்புடைய வாக்குச் சாவடி மையங்களில் அளிக்கலாம்.

விண்ணப்பங்கள் தொடர்புடைய அலுவலர்களால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுதியின் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். வருகிற 21.11.2026 (சனிக்கிழமை), 22.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 29.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய மூன்று நாட்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 2027ம் ஆண்டு ஜன. 4ம் தேதி வெளியிடப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top