Close
நவம்பர் 26, 2026 5:31 மணி

நாமக்கல் புது பேருந்து நிலையம் -மரூர்ப்பட்டி செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு தடை

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அருகே, ரயில்வே பாலத்தின் மேல் பகுதியில் இரும்பு பீம்கள் பொருத்தப்படுவதால், இன்று முதல் வரும் 22ம் தேதி வரை, ஒரு வாரத்திற்கு, மரூர்ப்பட்டி, செல்லிபாளையம் செல்லும் அவுட்டர் ரிங் ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு உதவி கோட்டப்பொறியாளர் அன்புசெழியன் கூறியுள்ளதாவது: நாமக்கல் அவுட்டர் ரிங்ரோடு திட்டம், முதலைப்பட்டியில், புதிய பேருந்து நிலையம் துவங்கி, வள்ளிபுரம் வரை, 5 கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது.

அதில், புது பேருந்து நிலையம் முதல், மரூர்ப்பட்டி வரை ரயில்வே மேம்பாலம் அமைகிறது. இப்பணியில், ரயில்வே தண்டாளப்பகுதியின் மேல், மேம்பாலம் அமைக்கப்படுகிறது. அதற்கான இரும்பு பீம்கள் பாலத்தின் கீழ் பகுதியில் தயாராக உள்ளது. இந்த இரும்பு பீம்களை, ரயில்வே தண்டாளப்பகுதியின் மேல் எடுத்து வைக்க, ரயில்வே துறையுடன் ஆலோசனை செய்யப்பட்டது.

அதையடுத்து, இன்று 16ம் தேதி முதல், 22 வரை, ரயில்வே தண்டவாளப்பகுதியின் மேல் பகுதியில் இரும்பு பீம்கள் எடுத்து வைக்க ஏதுவாக, ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்படுகிறது. அதன் காரணமாக, நாமக்கல் புதிய பேருந்து நிலையம் தல், மரூர்ப்பட்டி வழியாக செல்லிபாளையம் செல்லும் ரோடு தற்காலிகமாக மூடி போக்குரவத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top