மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்துள்ள பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம் உலகின் சிறந்த கட்டிடக்கலை அதிசயங்களில் ஒன்று. மலேசியாவின் நவீன வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அடையாளமாக இக்கோபுரம் திகழ்கின்றன.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் சீசர் பெல்லி என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1998-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 451.9 மீட்டர் (1,483 அடி) உயரம் கொண்ட இந்த கோபுரம் ஒவ்வொன்றும் 88 தளங்களைக் கொண்டுள்ளன. 1998 முதல் 2004 வரை இவையே உலகின் மிக உயரமான கட்டிடங்களாக இருந்தன. இன்றும் உலகின் மிக உயரமான இரட்டை கோபுரம் என்ற பெருமையை இவை தக்கவைத்துள்ளன.
இது உலகின் மிக உயரமான தொலைக்காட்சி மற்றும் தகவல் தொடர்பு கோபுரங்களில் ஒன்றாகும். புக்கிட் நனாஸ் வனத்தின் நடுவே அமைந்துள்ள இக்கோபுரம், இஸ்லாமிய மற்றும் பாரசீகக் கட்டிடக்கலை வடிவமைப்புடன் கூடிய நவீன தொழில்நுட்பத்தின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கோபுரத்தின் கீழ்ப்பகுதியில் ‘சூரியா கேஎல்சிசி’ எனப்படும் பிரம்மாண்ட வணிக வளாகமும், அறிவியல் மையமும், இசை அரங்கமும் அமைந்துள்ளன. வெளிப்புறத்தில் அழகிய நீரூற்றுகளுடன் கூடிய கேஎல்சிசி பூங்கா சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்கிறது.
இரவு நேரங்களில் மின்விளக்குகளின் ஒளியில் ஜொலிக்கும் இக்கோபுரங்கள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. குறிப்பாக இரவில் ஒருவிதமான ஒளியுடன் காட்சியளிக்கும் கோபுரம், பகலில் வெள்ளி நிறத்தில் ஜொலிப்பது கூடுதல் அழகு.
உலகெங்கிலும் இருந்து மலேசியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய முதன்மை இடமாகவும், மலேசிய நாட்டின் பெருமையின் சின்னமாகவும் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம் விளங்குகின்றன.
மலேசியாவிலிருந்து சங்கர் 🎋




