Close
நவம்பர் 26, 2026 5:35 மணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 59 ஆவது தேசிய நூலக வார விழா: சிறப்புப் புத்தகக் கண்காட்சி துவக்கம்

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஆகியவை இணைந்து நடத்தும் 59-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, சிறப்புப் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை இன்று (17.11.2026) புதுக்கோட்டை மாவட்ட மைய நூலக வளாகத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.

இப்புத்தகக் கண்காட்சியினை மாவட்ட நூலக அலுவலர் பா. முத்து குத்துவிளக்கேற்றி முறைப்படித் தொடங்கி வைத்து, அரங்குகளைப் பார்வையிட்டார். இன்று (17.11.2026) தொடங்கிய இக்கண்காட்சி, வரும் 21.11.2026 வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது.
பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வாசகர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் இலக்கியம், வரலாறு, பொதுஅறிவு, சிறுவர் கதைகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பல்வேறு பயனுள்ள நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இத்தொடக்க விழாவில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பொறுப்பாளர் வெங்கடேஷ், முதல் நிலை நூலகர் மு. சிவராமன், நூலகர்கள் கி. குமுதா மற்றும் சி. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகள், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு ஆர்வமுடன் புத்தகங்களைப் பார்வையிட்டு வாங்கிச் சென்றனர்.
அடுத்த 5 நாட்களுக்கு நடைபெறும் இக்கண்காட்சியில் வாசகர்களும் மாணவர்களும் பெருமளவில் பங்கேற்றுப் பயன்பெறுமாறு நூலக நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top