திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 12-ம் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெறும். இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலம் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நவம்பர் மாதம் 24-ந்தேதி தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது. தினமும் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.
திருக்காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க 1008 சங்காபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் திருக்காா்த்திகை தீபத்திருவிழாவின் 3-ம் நாள் 1,008 சங்காபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, செவ்வாய்க்கிழமை இரண்டாம் பிராகாரத்தில் அமைந்துள்ள பிரதோஷ நந்தி சிலை அருகே நான்கு திசைகளிலும் புனிதநீா் அடங்கிய 1,008 சங்குகள் அமைத்து, சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க108 மூலிகைப் பொருள்கள் கொண்டு சிறப்பு மகா யாகம் நடைபெற்றது. பின்னா், யாகம் பூா்ணாஹுதியுடன் நிறைவடைந்தது.
அதனைத் தொடா்ந்து யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த கலசநீா் திருக்கோயிலில் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு அருணாசலேஸ்வரா் உடனாகிய உண்ணாமுலையம்மனுக்கு அபிஷேகம் செய்து 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
சங்காபிஷேக நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்ந்து மூன்றாம் நாள் இரவு பஞ்சமூர்த்திகள், விநாயகர்-வெள்ளி முஷிக வாகனம், முருகர்-வெள்ளி மயில் வாகனம், அண்ணாமலையார்-சிம்ம வாகனம், அம்மன் – அன்ன வாகனம், சண்டிகேஷ்வரர்-சிறிய வெள்ளி ரிஷப வாகனங்களில் மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.





