Close
செப்டம்பர் 29, 2026 6:46 மணி

நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்ட கனரக லாரி: ஆர்டிஓ வழக்குப்பதிவு

நாமக்கல் அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனத்தின் மீது, போக்குவரத்து துறையினர் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை அப்புறப்படுத்தினார்கள்.

இரவு நேரங்களில் நெடுஞ்சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால், நாமக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் நடைபெறும் சாலை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதையொட்டி, நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் மேற்பார்வையில், காவல்துறை அதிகாரிகள் உதவியுடன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், சேலம்-கரூர் தேசிய நெடுஞசாலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பரமத்தி அருகே ராட்சத காற்றாலை ஏற்றி வந்த, கனரக வாகனம் ஒன்று சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருப்பதை கண்ட அதிகாரிகள், அந்த வாகனத்தின் மீது வழக்குப்பதிவு செய்தனர். வாகனத்தை நெடுஞ்சாலை ஓரங்களில் நிறுத்தக் கூடாது எனக் கூறி, வாகன நிறுத்துமிடத்தில்தான் வாகனங்களை நிறுத்வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு அந்த வாகனம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.

மேலும், ஒரு சொந்த காரை கனரக வாகனத்தின் பாதுகாப்பு வாகனம் (எஸ்கார்ட்) என அடையாள ஸ்டிக்கருடன் இயக்கப்படதால் அந்த வாகனத்தின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top