Close
செப்டம்பர் 29, 2026 6:56 மணி

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் சாலைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி மற்றும் வீதி நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பின் நாமக்கல் மாவட்டச் ராஜேஷ்கண்ணன், மோகனூர் காவல் ஆய்வாளர் ராஜபிரபு ஆகியோர் விழிப்புணர்வுப் பேரணியைக் தொடங்கி வைத்தனர்.

கல்லூரி நுழைவு வாயிலில் தொடங்கிய விழிப்புணர்வுப் பேரணி மோகனூர் மெயின் ரோட்டில் வழியாக லத்துவாடி வரை சென்று பின் மீண்டும் கல்லூரியை அடைந்தது. பேரணியின் போது சாலை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை மாணவ, மாணவியர் ஏந்திச் சென்றனர்.

மேலும், லத்துவாடி பேருந்து நிறுத்தத்தில் மாணவர்கள் சார்பில் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி வீதி நாடகம் நடைபெற்றது. முன்னதாக மாணவ, மாணவியர் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் கல்லூரி பொருளியல் துறைத்தலைவர் மாதவன், கல்லூரி சாலைப் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், சாலைப் பாதுகாப்பு மன்ற உறுப்பினர்கள் கார்த்திக், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top