நாமக்கல், வளையப்பட்டி, எருமப்பட்டி, கெட்டிமேடு பகுதிகளில் 8ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின் வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் 8ம் தேதி வியாழக்கிழமை நடக்கிறது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, என.ஜி,ஓ. காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி, சிலுவம்பட்டி, கிருஷ்ணாபுரம், தும்மங்குறிச்சி, எர்ணாபுரம், கணக்கம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் 8ம் தேதி, வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர், அரூர்மேடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.
எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் 8ம் தேதி (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, காவக்காரப்பட்டி, பவித்திரம் புதூர், செல்லிபாளையம், கஸ்தூரிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
கெட்டிமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் 8ம் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கோணங்கிப்பட்டி, பொன்னேரி, காளிசெட்டிப்பட்டி, புதுக்கோட்டை, அ.பாலப்பட்டி, ஈச்சவாரி, பொம்மசமுத்திரம், கணவாய்ப்பட்டி, கெட்டிமேடு, பொட்டிரெட்டிப்பட்டி, பீமநாயக்கனூர், பெருமாப்பட்டி, தூசூர், கொடிக்கால்புதூர், ரெட்டிப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




