Close
அக்டோபர் 6, 2026 8:29 மணி

பிரதமரின் உயர்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

பிரதமரின் உயர்கல்விக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, 2026-27ம் ஆண்டிற்கான, பிரதம மந்திரியின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில், மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும், மாணவ, மாணவியருக்கு, எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பாலிடெக்னிக், இளங்கலை (தொழிற்படிப்பு), முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கு, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2026-27ம் கல்வியாண்டில், பிரதமரின் உயர் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள், https://umis.tn.gov.in என்ற வெப்சைட் மூலம் ஆன்லைனில் பெறப்படுகிறது.

தகுதியுள்ள மாணவ, மாணவியர், தாங்கள் பயிலும் கல்லூரியில், கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி, வெப்சைட் மூலம் மூலம், வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top