Close
அக்டோபர் 8, 2026 7:31 மணி

சமரசமற்ற கவிஞர் புலவர் புலமைப்பித்தன் பிறந்த நாள்..,

கவிஞர் புலமைப்பித்தன் தமிழில் புலவர் பட்டம் பெற்றவர். தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர். சென்னைக்கு வேலை தேடி வந்த போது எம்ஜிஆர் ஆதரவால் 1968-இல் வெளியான குடியிருந்த கோயில் திரைப்படத்தில் நான் யார் நீ யார் என்ற பாடல் இயற்றியதில் பாடலாசிரியராக அறிமுகமானார்.

இவர் எழுதிய ஆயிரம் நிலவே வா என்ற பாடலினை முதன் முதலில், எஸ்.பி.பி அவர்கள் பாட அவருடைய திரைப் பயணம் தொடங்கியது. சிறந்த தத்துவ கருத்துக்களை புரட்சிக் கருத்துக்களை, புரட்சித் தலைவர் மூலம் வெளிப்படுத்தியவர்.

எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தவர் கவியரசருக்கு பின்பு தமிழ்நாடு அரசவை புலவராக அரசு பதவி பெற்றவர். கவியரசரோடு ஏற்பட்ட பிரிவுக்குப் பின் எம்ஜிஆர், பட்டுக்கோட்டையாரையும், புலமைப்பித்தனையும், தன்னுடைய திரைப்படங்களுக்கு திரைப்படப் பாடல்களுக்கு பணியாற்ற ஆஸ்தான கவிஞர்களாக பயன்படுத்திக் கொண்டார்.

சிறந்த பாடலாசிரியராக இருந்தாலும், கண்ணதாசன், வாலி, வைரமுத்து போல, பலதரப்பட்ட கதைச் சுழலுக்கேற்ப, விதவிதமான மொழிநடையில் பாடல்கள் புனையும் திறன் பெற்றவரில்லை. காதல் அல்லது தத்துவப் பாடல்களில், இலக்கியநயம் மேலோங்க, குறிப்பிட்ட கதைச்சூழல்களுக்கேற்ப மட்டுமே, அவரால் பாடல் புனைய முடிந்தது. இதனால் தான், அவரால் திரையுலகில் பெரிய அளவிலான புகழைப் பெற இயலவில்லை.

தவிர, அனைவருடனும் சுமூகமாகப் பழகும் பாங்கும், அவரிடம் கிடையாது. இது அவர், பெரிய அளவில் பிரபலமடையாமல் போனதற்கான இரண்டாவது காரணமாகும்.

மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க ரசனைகளைத் தாண்டி, அவரால் அடித்தட்டு மக்களுக்கான நடையில்,
பாடல்களைப் புனைய இயலவில்லை. அனைத்து தரப்பு மக்களின் ரசனைகளையும் கவர்பவர் மட்டுமே, பெரிய பாடலாசிரியராகத் திகழ முடியும்.

புலமைப்பித்தனால், தமது புலமை வட்டத்தை விட்டு வெளிவராத நிலையில், அவர் பிரபலப் பாடலாசிரியராவதில், பின்னடைவு நேரிட்டது. இது அவரைக் குறைகூறுவதாகாது. அவருடைய பாட்டெழுதும் பாங்கு அப்படி.

எனக்கு பிடித்த இரண்டு பாடல்கள்..,
இந்தப் பச்சைக்கிளிக்கொரு (நீதிக்கு தலை வணங்கு) மற்றும் புஞ்சை உண்டு நஞ்சை உண்டு (உன்னால் முடியும் தம்பி)..,

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top