Close
அக்டோபர் 8, 2026 10:10 மணி

நாமக்கல்லில் 2 நாட்கள் கம்பன் விழா: புதுச்சேரி அமைச்சர் பங்கேற்பு

நாமக்கல் கம்பன் கழகம் சார்பில், கம்பன் விழா வரும் 10ம் தேதி மற்றும் 11ம் தேதி ஆகிய 2 நாட்கள், சனு இண்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெறுகிறது. 10ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு துவக்க விழா நடைபெறுகிறது.

தொழில் அதிபர்கள் நல்லதம்பி, நல்லுசாமி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகிக்கிறார். செயலாளர் அரசு பரமேஸ்வரன் வரவேற்கிறார். புதுச்சேரி கம்பன் கழக தலைவரும், பொதுவிநியோகத்துறை அமைச்சருமான சிவக்கொழுந்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை துவக்கி வைத்து பேசுகிறார்.

புதுக்கோட்டை கவிதைப்பித்தனுக்கு கம்பர் விருதும், கோபி புதுப்பாளையம் நல்லசாமிக்கு கம்பன் மாமணி விருதும் மற்றும் துறைசார் வல்லுனர்கள் விருதும் வழங்கப்படுகிறது.

தொடர்ந்து புலவர் கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது. இந்த அரங்கில் இவர்கள் பேசினால் என்ற தலைப்பில், சீதையாக கங்கை மணிமாறன், சூர்ப்பனகையாக இளங்கோவன், மண்டோதரியாக தஞ்சை இனியன், கைகேயியாக மகாசுந்தர் ஆகியோர் கவிதை பாடுகின்றனர்.

11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு 2ம் நாள் நிகழ்ச்சியை, நாமக்கல் தமிழ்ச்சங்க தலைவர் டாக்டர் குழந்தைவேல் துவக்கி வைக்கிறார். சென்னை சுகிசிவம் தலைமையில், கவிச்சக்ரவர்த்தி கம்பன் பெண்மையை போற்றினார், போற்றவில்லை என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெறுகிறது.

போற்றினார் என்ற தலைப்பில் கோவை கவுசிகா பானு, தஞ்சை அட்சயா லோகேஷ்குமார் ஆகியோர் பேசுகின்றனர். போற்றவில்லை என்ற தலைப்பில் புதுக்கேட்டை பாரதி, திருச்சி சாத்தம்மை பிரியா ஆகியோர் பேசுகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top