Close
அக்டோபர் 8, 2026 6:47 மணி

நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நாமக்கல் எம்.பி. நியமனம்!

நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி (கொமதேக) நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன், நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவையின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தொடர்பான நிலைக்குழுவின் உறுப்பினராக மாதேஸ்வரன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளதாக மக்களவைச் சபாநாயகர் அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளார்.

ஊரகப் பகுதிகளின் வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மேம்பாட்டிற்கான இந்த முக்கியக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள மாதேஸ்வரன் எம்.பி.-க்கு, கொமதேக மூத்த நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top