Close
அக்டோபர் 10, 2026 6:38 மணி

யுபிஐ கட்டண விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து 12ம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்: வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு

யுபிஐ பரிவர்த்தனை கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் மாவட்டத்தில், வரும் 12ம் தேதி வணிகர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணந்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஏற்கனவே ஜிஎஸ்டி எனும் சிக்கலான வலையில் சிக்கி போராடிக் கொண்டிருக்கும் சிறு, குறு வணிகர்களிடம் எளிமையாக வணிகம் செய்யுங்கள் என சொல்லி யுபிஐ அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் இலவசம் என கூறி பழக்கப்படுத்தி, தற்போது வருகிற அக்டோபர் 15ம் தேதி முதல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

இன்று சிறு கட்டணம் என்கிற பெயரில் அமல்படுத்தி, பின்னர் வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இது பெரும் சுமையாக மாறும். மேலும் இந்த கட்டண விதிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயரும்.

இந்த கட்டண விதிப்பு சிறு, குறு வணிகர்களையும், நுகர்வோரையும் நேரடியாக பாதிக்கும் என்பதோடு, டிஜிட்டல் இந்தியா எனும் முழக்கத்திற்கு எதிரானது. எனவே மத்திய அரசு இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் அக். 12ம் தேதி, திங்கள்கிழமை அனைத்து வணிக நிறுவனங்களிலும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் காட்சிப்படுத்தப்படும்.

நாளை வணிகர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து அமைதியான முறையில் எதிர்ப்பினை தெரிவிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top