Close
அக்டோபர் 10, 2026 6:38 மணி

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கூட்ஸ் ஷெட் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் ரயில்வே கூட்ஸ் ஷெட்டில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டி, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் ரயில்வே கூட்ஸ் ஷெட் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில், ரயில் நிலையம் முன்பு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாரிமுத்து தலைமை வகித்தார். தங்கராஜ், இளங்கோ, சுப்பிரமணி, கிருஷ்ணன், ஜோதிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

நாமக்கல் ரயில்வே கூட்ஸ் ஷெட்டில் தொழிலாளர்கள் 24 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பதை ரத்து செய்து, ஏற்கனவே இருந்தவாறு, காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை வேலை நேரமாக அறிவிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி இஎஸ்ஐ, பிஎப் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குடிநீர், ஓய்வறை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என கோரி தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top