Close
அக்டோபர் 11, 2026 8:52 மணி

ரூ. 17 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் ரயில் நிலையம் திறப்பு விழா: வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்த பிரதமர் மோடி

நாமக்கல்லில் ரூ. 17 கோடி மதிப்பில், புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தை சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக கரூருக்கு கடந்த 2008ம் ஆண்டு புதிய ரயில் பாதை உருவாக்கப்பட்டது. நாமக்கல்லில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் நாமக்கல் ரயில் நிலையத்தை புதுப்பிக்க ரூ. 17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் நாமக்கல் ரயில் நிலையத்தில் கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டது. பயணிகள் ஓய்வறை, கழிவறைகள், வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை மேம்படுத்தப்பட்டன. பிளாட்பராங்களில் பயணிகள் நிழற்குடைகள் அதிகரிக்கப்பட்டு, கிரானைட் மற்றும் டைல்ஸ் பதிக்கப்பட்டது.

6 மீட்டர் உயரத்திற்கு நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு, பிளாட்பாரத்திற்கு செல்வதற்காக 4 லிஃப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ரயில் நேரங்களை அறிவிக்கும் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் மற்றும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ரயில் நிலைய நுழைவு வாயிலில் புதிய அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் ரயில் நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், எம்எல்இ திலீப், பாஜ மாநில துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம், கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் சரவணன், மேற்கு மாவட்ட பாஜ தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னையில் இருந்து பாரத பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் ரயில் நிலையத்தை திறந்து வைத்தார். முன்னதாக பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top