Close
அக்டோபர் 11, 2026 8:07 மணி

அலங்காநல்லூர், அருகே பண்ணை குடி கிராமத்தில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

அலங்காநல்லூர் அருகே, அலங்காநல்லூர் மாட்டுத்தாவணி செல்லும் வழியில் உள்ளது பண்ணை குடி ஊராட்சி. இந்த ஊராட்சியில் கடந்த மூன்று மாதங்களாக இரவு நேரங்களில் ஆறு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்படுவதாக தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், மின்சார துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், மின்தடையால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் கல்வி கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத மின்சார துறை அதிகாரிகளை கண்டித்தும் மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்க கோரியும், அலங்காநல்லூர் மாட்டுத்தாவணி செல்லும் சாலையில் திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர்

கிராம பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், அலங்காநல்லூர் மாட்டுத்தாவணி செல்லும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பாட புத்தகங்களுடன் மறியலில் அமர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், மாலை 7 மணி வரை விவசாய வேலைகள் மற்றும் கூலி வேலை பார்த்துவிட்டு வீட்டிற்கு வரும் நிலையில் வீட்டில் கரண்ட் இல்லாதது மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்ய முடியவில்லை. மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இரவு நேரங்களில் மின்தடையால் படிக்க முடியாமல் கல்வி கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஆகையால்,
மின்தடை ஏற்படாதவாறு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். மேலும் தினசரி இரண்டு மணி நேரம் 3 மணி நேரம் வரக்கூடிய மின்சாரமும் விட்டு விட்டு வருவதால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களும் பழுதாகி விடுகிறது.

ஆகையால், மின்தடை ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top