திருவண்ணாமலை ரயில்வே நிலைய அலுவலகத்தில் ஆன்மீக பக்தர்கள் , பொதுமக்கள் அதிகளவில் வருகை தருவதால் ரயில் பயணிகளுக்கு அடிப்படை வசதி மற்றும் அதிக அளவில் ரயில்கள் இயக்க வேண்டி திருச்சி ரயில்வே மண்டல வணிக மேலாளர் பி.வெங்கட்ராகவனிடம் மக்கள் நண்பர்கள் குழு மாவட்ட தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
1. விழுப்புரம் – காட்பாடி ரயில் ஒருவழிப்பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்ற வேண்டும்.
2. ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
3. நீண்ட நாட்களாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பார்சல் அலுவலகம் இல்லை. இதை நிறைவேற்ற வேண்டும்.
4. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு பேட்டரி கார்கள் இயக்க வேண்டும்.
5. ரயில் நிலையத்தில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் பயணிக்க லிப்ட் வசதி விரைவில் செய்து தர வேண்டும்.
6. ரயில் நிலையத்தில் மக்கள் அதிக அளவில் வருகை தருவதால் ஆண்கள் கழிப்பறை, பெண்கள் கழிப்பறை அதிகப்படுத்த வேண்டும்.
7. விசாகப்பட்டினம், நாக்பூர், ஹைதராபாத், ஹுப்பாலி, சிவமோகா, மங்களூர், மதுரை, திருவனந்தபுரம், ஆகிய மாநகரிலிருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் சேவை.
8. திருவண்ணாமலை TO சென்னைக்கு (CIRCULAR) வட்ட ரயில் பாதை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு ரயில் விட வேண்டும்.
9. திருவண்ணாமலை கலெக்டர் ஆபீஸ், மாவட்ட நீதிமன்றம், GH மருத்துவமனை, மாவட்ட விளையாட்டு அரங்கம், SP ஆபீஸ் இந்த அலுவலகங்களை ஒன்றிணைத்து GH மருத்துவமனை ரயில்வே நிறுத்தம் (STOPING) உருவாக்க வேண்டும்.
10. திருவண்ணாமலை ரயில்வே நிலையத்தை சந்திப்பாக உருவாக்க வேண்டும்.
11. திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ரயில் நிற்பதற்கு நான்கு ஸ்டாண்டுகள் உள்ளது. இதை 6 க்கும் மேற்பட்ட ரயில்வே ஸ்டாண்டுகளாக உருவாக்க வேண்டும்.
12. திருவண்ணாமலை ரயில்களை சுத்தம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு தனி ரயில்வே ஸ்டாண்டுகளை உருவாக்க செய்ய வேண்டும்.
13. பயணிகள் ரயில்களில் குடிநீர் ஏற்றம் செய்து மேலும் ஓடும் ரயிலில் பயணிகளுக்கு கழிப்பறையில் தண்ணீர் வசதி செய்யது தர வேண்டும்.
14. திருவண்ணாமலைக்கு வரும் ரயில்வே பயணிகள் மற்றும் ஆன்மீக பக்தர்களுக்காக வெயில் காலங்களில் தண்ணீர் குடிப்பதற்கு குளிர்சாதனம் வசதி ஏற்படுத்த வேண்டும்.
15. சரள பள்ளி – திருப்பதி தினசரி ரயில் திருச்சிராப்பள்ளி வரை நான்கு மாதங்கள் முன்பே நீட்டிப்பு செய்தீர்கள் இன்று வரை நீட்டிப்பு செய்யவில்லை
16. திருப்பதி கொல்லம் ரயில் திருவண்ணாமலை வழியாக தினசரி ரயில் சேவை ஆன்மீக பக்தர்கள் பயணிகள் சபரிமலை திருச்செந்தூர் மதுரை திருநெல்வேலிக்கு நேரடி ரயில் வசதி வேண்டும்.
17. நர்சாபூர் திருவண்ணாமலை வாரம் ஒரு நாள் வருகிறது வாரம் 4 நாட்கள் வர ஏற்பாடு செய்ய வேண்டும்.
18. திண்டிவனம் – திருவண்ணாமலை புதிய ரயில் பாதை பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது அப்ப பணியை வேகப்படுத்தி தொடர செய்ய வேண்டும்
19. திருவண்ணாமலை – திருப்பத்தூர் வழியாக புதிய ரயில் பாதைக்கு விரைவில் திட்டம் அறிவிக்க வேண்டும்.
20. திருவண்ணாமலையில் ரயில் பயணிகள் அதிகமான வருகை தருவதால் ஆண்டுக்கு 25 கோடிக்கு மேல் வருமானம் வருவதால் வெகு விரைவில் பல திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
21. ஏற்கனவே உள்ள வாரம் நான்கு முறை உள்ள ராமேஸ்வரம் திருப்பதி ரயில் தினசரி ரயிலாக விட வேண்டும் அல்லது ராமேஸ்வரம் டு ஹைதராபாத் வரை நீடிப்பு செய்ய வேண்டும்.
22. விழுப்புரம் – திருப்பதி காலை மாலை இயக்கம் இரு மார்க்கத்திலும் திருச்சிராப்பள்ளி நீட்டிக்க வேண்டும்.
23. பாண்டிச்சேரி – புதுடில்லி ரயில் விழுப்புரம் சென்னை வழியாக செல்கிறது இந்த ரயிலை திருவண்ணாமலை சென்னை பெரம்பூர் வழியாக மாற்றம் செய்ய வேண்டும்.
24. அகமதாபாத் – ராமேஸ்வரம் ரயில் திருப்பதி திருவண்ணாமலை வழியாக புதிய ரயில் சேவை வேண்டும்.
25. திண்டிவனம் TO நகரி புதிய ரயில் பாதை திட்டம் கூடிய விரைவில் ரயில் சேவையை விட வேண்டும் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் சேத்துப்பட்டு ஆரணி வந்தவாசி செய்யார் மக்கள் வெகுகாலமாக வேண்டுதல் காத்திருக்கிறார்கள்.
26. மன்னார்குடி – திருப்பதி வாரம் மூன்று முறை உள்ள ரயில் தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
நிகழ்ச்சியில் ரயில்வே மண்டல முதன்மை வணிக ஆய்வாளர் ஞானபிரகாசம், மாவட்ட துணை அமைப்பாளர் வெங்கடேசன், நகர துணை அமைப்பாளர்கள் ஆகாஷ், மணிமாறன், முத்து உள்படபலர் உடனிருந்தனர்.
Post Views: 35