Close
நவம்பர் 26, 2026 5:44 மணி

மாவட்ட அளவிலான கல்வி மீளாய்வுக் கூட்டம்

தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய ஆட்சித்தலைவர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான மாதாந்திர கல்வி மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறைசார்ந்த இடைநின்ற மாணவர்கள் பள்ளியில் சேர்த்தல், பள்ளி மேலாண்மை குழு, உயர்கல்வி வழிகாட்டி, பள்ளிகளுக்கானஅடிப்படை கட்டமைப்பு வசதிகள், மாணவர்கள் ஆசிரியர்கள் வருகை பதிவு, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களின் பள்ளி பார்வை அறிக்கை, மாணவர்களுக்கான ஆதார் பதிவு, நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம், பள்ளிகளுக்கான இணையதள வசதி முதலிய செயல்பாடுகள் சார்ந்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களிடம் ஆய்வு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து காலாண்டு தேர்வு முடிவுகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், அனைத்து பள்ளி வயது மாணவர்களையும் பள்ளியில் தக்க வைத்தும் அவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி சிறந்த மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவதை அனைவரும் உறுதி செய்தல் வேண்டும் என அறிவுறுத்தினார்.

காலாண்டு தேர்வு முடிவுகளை முழுமையாக பகுப்பாய்வு செய்து தேவையான ஆய்வுக் கூட்டங்களை நடத்த முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.

மாணவர்களுக்கு தேவையான விழிப்புணர்வு தகவல்களை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் வழங்குதல் வேண்டும் எனவும் மாணவர்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிட அனைத்து வகையிலும் ஊக்க அளித்தல் வேண்டும். மேலும் 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி அவர்கள் முழுமையான அடிப்படை கல்வித்திறனை பெற்று இருப்பதை சார்ந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் உறுதி செய்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் கேட்டுக்கொண்டார்.

மேலும் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மலர்க்கேணி செயலி குறித்தும் கலந்துரையாடப்பட்டு அனைத்து ஆசிரியர்களும் மற்றும் மாணவர்கள் இச்செயலியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து இக்கூட்டத்தில் அரசு பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விப் படிப்புகள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகளைத் தேர்ந்தெடுக்க உதவும் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டத்தை சிறப்பாக செயலாற்றிய 20 அரசு பள்ளிகளுக்கும் மற்றும் பள்ளி மேலாண்மை குழுக்களை சிறப்பாக செயல்படுத்திய 5 அரசு பள்ளிகளுக்கும், அனைத்து குழந்தைகளும் பள்ளியில் என்ற திட்டத்தின் கீழ் பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் கல்வி முறைக்குள் கொண்டு வந்து சிறப்பாகச் செயல்பட்ட 11 அரசு பள்ளிகள், பள்ளி வளர்ச்சியில் முன்னாள் மாணவர்கள் ஈடுபாட்டை உறுதி செய்து மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்குப் பங்களிக்கச் செய்த சிறந்த 2 அரசு பள்ளிகள் என மொத்தம் 38 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் செந்தில்முருகன், கார்த்திகேயன் , தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மாவட்ட மற்றும் வட்டார அளவிலான கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top