Close
நவம்பர் 26, 2026 5:47 மணி

நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 20 பைசா உயர்வு :

கோப்பு படம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 20 பைசா உய்ந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 5.90 ஆனது.

நாமக்கல் மண்டலத்தில் கடந்த அக். 21ம் தேதி ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் ரூ. 5.60ல் இருந்து 10 பைசா அதிகரித்து ரூ. 5.70 ஆனது. பின்னர் 10 நாட்களாக முட்டை விலை தொடர்ந்து ரூ. 5.70 ஆக நீடித்தது.

இந்த நிலையில், இன்று மாலை மண்டல என்இசிசி தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.90 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

கோழி விலை: பிராய்லர் கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 126 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டை கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ 105 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top