Close
நவம்பர் 26, 2026 5:44 மணி

பாப்பிநாயக்கன்பட்டியில் மாநகராட்சி சார்பில் இயற்கை உரம் விற்பனை மையம் திறப்பு விழா

பாப்பிநாயக்கன்பட்டியில், நாமக்கல் மாநகராட்சியின் செழிப்பு இயற்கை உரம் விற்பனை மையம் தொடக்க விழா நடைபெற்றது.

நாமக்கல் மாநகராட்சியின் சார்பில் மக்கும் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படும் செழிப்பு இயற்கை உரத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், பாப்பிநாயக்கன்பட்டியில் சிறப்பு விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் திறப்பு விழாவில், மாநகராட்சி கமிஷனர் செல்வபாலாஜி கலந்துகொண்டு, மையத்தை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். மாநகராட்சியின் மக்கும் குப்பை மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் இயற்கை உரத்தின் பயன்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

நிகழ்ச்சியில் துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார், தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி, துப்புரவு மேற்பார்வையாளர்கள் பிரபு, புனிதா மற்றும் கோயில் நிர்வாகிகள் பொன்னுசாமி, ரவிச்சந்திரன், மணிமாறன், சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top