தமிழகத்தில், மாநில அரசு, பதிவுத் துறையில், ஸ்டார் 3.0 இண்டர்நெட் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது, நேரில்வர தேவையற்ற பதிவு நடைமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டப் பதிவாளர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, சங்க மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். துணை செயலாளர் நாகேந்திரன் முன்னிலை வகித்தார்.
தமிழகத்தில் பத்திரம் பதிவு செய்யும் பணிகளில், மாநில அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘ஸ்டார் 3.0’ இண்டர்நெட் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். காகிதம் இல்லா மற்றும் நேரில் வர தேவையற்ற பதிவு நடைமுறைகளை திரும்ப பெற வேண்டும்.
பத்திரம் நகல் எழுதுவோர் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாவட்டம் முழுவதும், இருந்து, 500க்கும் மேற்பட்ட பத்திரம் எழுதுவோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, வரும், 10, 11தேதிகளில் பத்திரம் எழுதுவதை புறக்கணித்து, பத்திரம் எழுதும் அலுவலகத்தை மூடி போராட்டத்தில் ஈடுபடுவோம் என, சங்கத்தினர் தெரிவித்தனர்.




