மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் மாநகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டனர்.
நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம், சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சென்று, கொண்டிசெட்டிப்பட்டி அரசு பள்ளியில் நிறைவடைந்தது. ஓட்டம் நிறைவில் சிறப்பாக பங்கேற்றவர்களுக்கு எம்எல்ஏ திலீப் பரிசு வழங்கி பாராட்டினார்.
மழைநீரை வீணாக்காமல் சேமிப்பதன் அவசியத்தையும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதில், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தையும் பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டது.




