Close
நவம்பர் 29, 2026 5:43 மணி

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்: மாநில பார்வையாளர் நேரில் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை, மாநில பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு முகாம், மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் நிதித்துறை சிறப்பு செயலாளர் லலிதா,  மாவட்ட ஆட்சியர் மதுபாலன் முன்னிலையில், நாமக்கல் மாநகராட்சி கோட்டை துவக்கப் பள்ளி மற்றும் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் சிறப்பு முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் செல்வபாலாஜி, நாமக்கல் ஆர்டிஓ பிரபாகரன், திருச்செங்கோடு ஆர்டிஓ லெனின், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top