ஜெயிலரின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக தான், இந்த ஜெயிலர் 2. பழிவாங்க துடிக்கும் சிலை கடத்தல் வில்லன்களிடமிருந்து, டைகர் முத்து வேல் பாண்டியன் என்கிற ரஜினி எப்படி தன் குடும்பத்தை காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.
முதல் பாதியில் சுராஜ், மறுபாதியில் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் தங்கள் வில்லன் பாத்திரத்தை பக்காவாக செய்திருக்கின்றனர். பொதுவாக அதீதமாக தெரியும் அனிருத்தின் இசை, இந்த படத்தில் அவர் தந்த பின்னணி இசை, படத்தின் காட்சிக்கு ஏற்ப, கசித்தமாக பொருந்துகிறது.
அடிதடி, வெட்டு குத்து, கட்டிடம் மற்றும் விமான வெடிப்பு, கார் ஓட்ட காட்சிகளில், 4DX திரையரங்கில் பார்த்ததால், அது சிலிர்ப்பூட்டும் சினிமா அனுபவமாக இருந்தது.
இத்தனை ஆண்டுகளுக்கு பின்னும் ரஜினி திரையில் தோன்றும் போது, அரங்கம் அதிராமல் இல்லை. இவ்வளவு கண் மூடித்தனமாய் அவரை மக்கள் ஏன் கொண்டாடுகின்றனர்!. 75 வயதில் அவருடைய ஜெயிலர் 2 படம் இன்றும் ட்ரெண்டிங். அவர் சூப்பர் ஸ்டாராக தொடர்கிறார். முதுமையும் வந்து விட்டது ஆனாலும் மாஸ் குறையவில்லை.
திரைத்துறை சார்ந்த கலைஞர்கள் மக்களை மகிழ்விக்கறதும், மக்களை என்டர்டெயின்மென்ட் செய்யறது தான் அவங்க வேலை. திறமை இருந்தால் எத்தனை வயதிலும் மக்களுக்கு தனது கலை திறமையால் மகிழ்விக்கலாம்.
கேமராவுக்கு முன் அவர் வெளிப்படுத்தும் இயல்பான பாணி மற்றும் திரையை ஆக்கிரமிக்கும் தன்மை ஆகியவை வேறு யாருக்கும் எளிதில் கைவராத ஒன்று.
திரையில் அவர் நடக்கும் விதமும், பேசும் முறையும் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான அனுபவத்தைத் தருகின்றன. எவ்வளவு கடுமையான விமர்சனங்கள் வந்தாலும், முதல் சில நாட்களின் வசூல் மூலம் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றும் திறன் கொண்டவராக, ரஜினி அவர்கள் தொடர்வது வர்த்தக ரீதியான பலமாகும்.
ஜெயிலரில் மிகுதியாகக் காணப்படும் தனித்துவமான நகைச்சுவை காட்சிகள் மூலம் இயக்குனருக்குள் இயல்பாக இருக்கும் நகைச்சுவை உணர்வு வெளிப்பட்டிருக்கிறது. நகைச்சுவை கலந்த நீரோடையான முதல் பாதி, காட்டாற்று வெள்ளமான இரண்டாம் பாதிக்கான முன்னுரையை எழுதிவிடுகிறது.
இடைவேளைக்குப் பிந்தைய வரிசைக்கிரமான காட்சிகளில் நாயகனின் அதிரடி நடவடிக்கைகளும், திருப்புமுனை காட்சிகளும் நம்மை உற்சாக உச்சத்தில் உட்கார வைத்து விடுகிறது. திரையரங்கில் பார்த்து விடுங்கள்
இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎥




