Close
அக்டோபர் 23, 2026 2:39 காலை

நாமக்கல் மாநகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் ரூ. 219 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்.2, முதலைப்பட்டி பகுதியில் சிறப்பு நிதியின் கீழ் ரூ. 3.95 கோடி மதிப்பீட்டில் மண்டல அலுவலகம் கட்டும் பணியினையும், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 211.83 கோடி மதிப்பீட்டில் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தினசரி 11.13 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கழிவுநீர் சேகரிப்பு உட்பட பாதாள சாக்கடை, சின்னமுதலைப்பட்டி பகுதியில் பம்பிங் ஸ்டேஷன், பொன்நகர் முதல் தெருவில் இயந்திர துளை கட்டுதல் மற்றும் பொன்நகர் மேற்கு காலனியில் கழிநீர் இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் மதுபாலன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், நாமக்கல் துறையூர் ரோட்டில், கல்விநிதி திட்டத்தின் கீழ் ரூ. 3.10 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் கட்டப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி கமிஷனர் செல்வபாலாஜி மற்றும் துறை அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top