Close
செப்டம்பர் 22, 2026 6:14 மணி

நாமக்கல் மாநகராட்சியில் காமராஜர் காலை உணவுத்திட்டம்: எம்.பி தொடங்கி வைத்தார் தொடக்கம்

நாமகக்கல் மாநகராட்சியில், பள்ளிக்குழந்தைகளுக்கான காமராஜர் காலை உணவு திட்டத்தை, கொமதேக., எம்.பி., மாதேஸ்வரன் துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாநகராட்சி மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஏற்கனவே காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2098 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

தற்போது தமிழக அரசால் காமராஜர் காலை உணவுத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, 6 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், நிதி உதவி பள்ளிகளில் படிக்கும் 8ம் வகுப்பு வரையான குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்சசிக்கு மாநகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி தலைமை வகித்தார். நாமக்கல் கொமதேக எம்.பி., மாதேஸ்வரன் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து, மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டார். இத்திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 1,593 பள்ளி மாணவ மாணவியர் பயன்பெறுவார்கள். மொத்தம் 3,691 மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் கஸ்தூரி பாய், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, உதவி பொறியாளர்கள் ரவி, சரண்யா, சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், நந்தினி, பள்ளி தலைமை ஆசிரியை கோமதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இளங்கோ உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top