Close
செப்டம்பர் 26, 2026 6:04 மணி

நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்1, 1ஏ தேர்வு: நாமக்கல் பகுதியில் சிறப்பு பேருந்து வசதி

கலெக்டர் மதுபாலன்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ, தேர்வு எழுதுபவர்களுக்காக சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழகம் முழுவதும் நாளை தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், ஒருங்கிணைந்த குடிமைப்பணிக்கான, குரூப்1 மற்றும் குரூப் 1ஏ தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கு செல்லும் தேர்வர்களுக்காக, சேலம் மண்டல அரசு போக்குவரத்து கழக்கத்தின் மூலம், நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர்.

மோகனூர் மார்க்கமாக காலை 7.25 மணி முதல் 8.30 மணிவரை தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்படும். ராசிபுரம் மார்க்கமாக காலை 7 மணி முதல் 8.35 மணிவரையும், திருச்செங்கோடு மார்க்கமாக காலை 7:25 முதல் 8.35 மணி வரையும், சேந்தமங்கலம் மார்க்கமாக காலை 7:15 மணிக்கும், 8.15 மணிக்கும் நகர பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செங்கோடு மற்றும் ராசிபுரம் மார்க்கமாக சுமார் ஐந்து நிமிட கால இடைவெளியில் புறநகர் பேருந்துகள் இயக்கப்படும். இந்த சிறப்பு பேருந்துகள் மூலம் தேர்வு மையங்களுக்கு செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகள் தேர்வு மையத்தின் முன்பு நிறுத்தி செல்லப்படும். பேருந்துகளின் முன்புறத்தில் தேர்வர்கள் அறிந்து கொள்ளும் வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு சிறப்பு பேருந்து என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top