Close
அக்டோபர் 17, 2026 3:55 காலை

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் 5 நாட்கள் கன மழை: வானிலை மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், நாளை முதல் 5 நாட்கள் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, வானிலை முன் அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த வாரம் பரவலாக மழை பதிவாகியுள்ளது. பகல் நேர வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் இரவு நேர வெப்பம் 75 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் நிலவியது.

நாளை அக் 17ம் தேதி முதல் 21ம் @ததி வரை 5 நாட்கள், அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை 89.6 டிகிரி முதல் 91.4 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை 66.2 முதல் 73.4 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.

5 நாட்கள் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 80 முதல் 100 சதவீதம் வரை இருக்கும். காற்று கிழக்கு தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து, மணிக்கு 6 முதல் 8 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

மாவட்டத்தில் இன்று 17ம் தேதி 34 மி.மீ., 18ம் தேதி 33 மி.மீ., 19ம் தேதி 37 மி.மீ., 20ம் தேதி 35 மி.மீ., 21ம் தேதி 37 மி.மீ., வரை மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top