Close
அக்டோபர் 17, 2026 3:54 காலை

நாமக்கல் மாவட்டத்தில் 23ம் தேதி, கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 23ம் தேதி பகல் 11 மணிக்கு புதுச்சத்திரம் பிடிஓ அலுவலகத்தில், ஆர்டிஓ தலைமையில் நடைபெறும்.

திருச்செங்கோடு வருவாய் கோட்டத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் 23ம் தேதி காலை 11 மணிக்கு பள்ளிபாளையம் பிடிஓ அலுவலகத்தில், ஆர்டிஓ தலைமையில் நடைபெறும்.

கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top