Close
நவம்பர் 26, 2026 5:35 மணி

கழிவுகளைச்சேகரிப்போர், மயான பணியாளர்களுக்கு மாநகராட்சி மூலம் நலவாரிய அட்டை

நாமக்கல் மாநகராட்சியில் தெருக்களில் கழிவுகளைச் சேகரிப்போர் மற்றும் மயானப் பணியாளர்கள் உள்ளிட்ட 39 பேருக்கு நலவாரிய நலத்திட்ட அட்டைகள் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாநகராட்சியில் தூய்மைப் பணிகள் மற்றும் நகரின் சுகாதாரப் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றி வரும் தெருக்களில் கழிவுகளைச் சேகரிப்போர் மற்றும் மயானப் பணியாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தின் நலத்திட்ட அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமை வகித்து நலவாரிய அடையாள அட்டைகளை வழங்கினார். மாநகராட்சிப் பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து மறுசுழற்சிக்குப் பயன்படும் பொருட்கள், காகிதம், பிளாஸ்டிக், உலோகம் உள்ளிட்ட கழிவுகளைச் சேகரித்து, அவற்றைத் தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வரும் 10 பணியாளர்கள். மயானங்களில் இறுதிச் சடங்குகளுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தல், மயான வளாகத்தைத் தூய்மையாகப் பராமரித்தல், இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் அல்லது தகனம் செய்வதற்குத் தேவையான பணிகளில் உதவுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வரும் 29 மயானப் பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 39 பேருக்கு நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top