நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 3 நாட்களில் 50 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 6.20 ஆனது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த அக். 21ம் தேதி ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் ரூ. 5.60ல் இருந்து 10 பைசா அதிகரித்து ரூ. 5.70 ஆனது. பின்னர் 10 நாட்களாக முட்டை விலை தொடர்ந்து ரூ. 5.70 ஆக நீடித்தது. 30ம் தேதி முட்டை விலை 20 பைசா அதிகரித்து ரூ. 5.90 ஆனது. 31ம் தேதி மீண்டும் 20 பைசா அதிகரித்து ரூ. 6.10 ஆனது.
இந்த நிலையில், இன்று மாலை மண்டல என்இசிசி தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மேலும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 6.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது. முட்டை விலை 3 நாட்களில் 50 பைசா உயர்ந்துள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஸ்ராவன், நவராத்திரி, தசரா உள்ளிட்ட பண்டிகை காலம் முடிவடைந்துள்ளதால் முட்டை விலை மேலும் அதிகரிக் வாய்ப்புள்ளதாக முட்டை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோழி விலை: பிராய்லர் கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 117 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ 100 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.



