Close
நவம்பர் 26, 2026 5:26 மணி

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், நாளை முதல் 4 நாட்கள் பரவலாக பரவலமாக மழை பெய்ய வாய்ப்புள்ளாதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, வானிலை முன் அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த வாரம் லேசான மழை பதிவாகியுள்ளது. பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை 77 டிகிரியாகவும் நிலவியது.

நாளை நவ. 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை 4 நாட்கள், அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை 86 டிகிரி முதல் 89.6 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை 75.2 முதல் 77 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.

4 நாட்கள் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 80 முதல் 90 சதவீதம் வரை இருக்கும். காற்று கிழக்கு, தென்கிழக்கு மற்றும் வடகிழயக்கு திசையில் இருந்து, மணிக்கு 6 முதல் 8 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

மாவட்டத்தில், நாளை நவ. 5ம் தேதி 16 மி.மீ., 6ம் தேதி 10 மி.மீ., 7ம் தேதி 20 மி.மீ., 8ம் தேதி 20 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top