Close
நவம்பர் 26, 2026 5:27 மணி

நாமக்கல் மாநகராட்சியில் குப்பை கொட்டும் பொது இடங்களில் பூங்காக்கள் அமைப்பு

நாமக்கல் மாநகராட்சியில் பொதுமக்கள் குப்பை கொட்டும் பொது இடங்களை சுத்தம் செய்து, சிறிய பூங்காக்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

நாமக்கல் மாநகராட்சி 6வது வார்டு, சேலம் ரோட்டில் காப்ளக்ஸ் தியேட்டர் அருகில் உள்ள பொது இடத்தில் பல ஆண்டுகளாக குப்பைகள் மற்றும் கழிவுகள் போடப்பட்டு வந்தது. அந்த இடத்தை நாமக்கல் மாநகராட்சி, தூய்மைப்பணியாளர்கள் மூலம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது.

பின்னர், மாநகராட்சியின் சார்பில் பயன்பாடற்ற பழைய டயர்களுக்கு வர்ணம் பூசி அதில் அழகிய பூச்செடிகள் அங்கு வைக்கப்பட்டு அது சிறிய பூங்காவாக மாற்றியமைக்கப்பட்டது. மேலும் மீண்டும் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் அந்த இடம் பசுமைப்பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்படும் இடங்களை அழகுபடுத்தி, மீண்டும் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில், தூய்மை இந்தியா இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி, இப்பணி மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமையில் கடைபிடிக்கப்படும் எனது கழிவு – எனது பொறுப்பு என்ற கருப்பொருளின் அடிப்படையில் தூய்மை மற்றும் அழகுபடுத்தும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநகராட்சி தூய்மைப் பணி அலுவலர் திருமூர்த்தி, தூய்மை ஆய்வாளர் பாஸ்கரன், பரப்புரையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top