Close
நவம்பர் 26, 2026 5:25 மணி

நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 20ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் -கோப்பு படம்

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 20ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் மாதந்தோறும் 3வது வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.

இந்த மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 20ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேனேஜர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், விற்பனை பிரதிநிதி, ஏரியா மேனேஜர், டீம் லீடர், மேற்பார்வையாளர், கணக்காளர், கேஷியர், டைப்பிஸ்ட், மெக்கானிக், விற்பனை உதவியாளர் போன்ற பல பணிகளுக்கு தேர்வு செய்ய உள்ளனர்.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், 12-ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி, ஐ.டி.ஐ பயிற்சி மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி ஆண், பெண் மற்றும் அனைத்து வித கல்வித் தகுதி உள்ளோரும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top