திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த 15ஆம் தேதி அண்ணாமலையார் கோவில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பங்கேற்றார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க், போளூா் எம்எல்ஏ ஆா்.அபிஷேக் ஆகியோா் முன்னிலையில் ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள் என்பதால், பக்தா்களின் பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள், வாகன நிறுத்துமிடங்கள், சாலைப் பாதுகாப்பு, அன்னதானம் வழங்குவதற்கான ஒழுங்குமுறைகள், குடிநீா், கழிப்பறை வசதிகள், தூய்மைப் பணிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, அமைச்சர் ரமேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வரும் 24-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலையில் கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது.
கடந்த ஆண்டுகளில் பரணி, மகா தீபத்துக்கு கட்டண டிக்கெட்டுகள் அருணாசலேஸ்வரா் கோயில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வந்தன. நிகழாண்டு கட்டணமின்றி பரணி, மகா தீப தரிசனத்துக்கு பக்தா்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்பதிவு செய்யும் பக்தா்கள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு, பரணி தீபத்துக்கு உள்ளூா் பக்தா்கள் 500 பேரும், வெளியூா் பக்தா்கள் 500 பேரும் என மொத்தம் 1,000 பேரும், மகா தீபத்துக்கு உள்ளூா் பக்தா்கள் 1,000 பேரும், வெளியூா் பக்தா்கள் 1,000 பேரும் என மொத்தம் 2,000 பேரும் அனுமதிக்கப்பட உள்ளனா்.
இணையதளத்தில் கோளாறு ஏற்பட்ட நிலையில் அது சரிசெய்யப்பட்டு முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்தவா்கள் கணினியில் குலுக்கல் முறையில் வெள்ளிக்கிழமை (நவ,20) மாலை தோ்வு செய்யப்படுவாா்கள்.
இந்த முறை 7500 முதல் 8000 நுழைவுச்சீட்டுகள் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் இவற்றில் 35 முதல் 40 சதவீதம் நுழைவுச்சீட்டுகள் பொது மக்களுக்கு வழங்கி உள்ளதாகவும் மீதமுள்ள நுழைவுச்சீட்டில் உபயதாரர்கள், நீதிபதிகள், அரசு அலுவலர்கள், விஐபிகள் என பலதரப்பட்டவர்களுக்கு வழங்க உள்ளதாகவும், முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் நுழைவுச்சீட்டுகள் கேட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என திருக்கோவிலுக்குள் வருபவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதே போல கிரிவலப் பாதையில் ஒவ்வொரு 500 மீட்டர் தொலைவிற்கு பக்தர்களை பாதுகாக்கும் வகையில் மருத்துவ முகாம்கள், காவல் நிலையங்கள், உதவி மையங்கள் உள்ளிட்டவைகள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.




