Close
நவம்பர் 26, 2026 5:35 மணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பிரச்சார இயக்கம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட, மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலங்களில் பிரச்சார இயக்கம் மேற்கொண்டனர்.

மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாநில பொதுச்செயலாளர் சோமசுந்தரம் கோரிக்கைகள விளக்கி பேசினார்.

பிரச்சார இயக்கத்தில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான விதிமுறைகளை உடனடியாக வெளியிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடன் தொடங்க வேண்டும்.

சிறப்பு காலமுறை சம்பளத்தில் பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் முறையான காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் எம்ஆர்பி நர்சுகள் அனைவரையும் காலமுறை சம்பளத்தில் நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4-ம் தேதி தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம். அதன்பிறகும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில் சங்க கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சங்க மாநில பொதுச்செயலாளர் சோமசுத்தரம் தெரிவித்தார். சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமான அரசு ஊழியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top