நாமக்கல்லில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் என்எஸ்எஸ் திட்டம் சார்பில், நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட பள்ளிகள் அளவிலான சிறப்பு சேவைத்திட்ட முகாம், கடந்த செப். 26 முதல் நடைபெற்று வருகிறது.
அதில் ஒரு நிகழ்வாக, போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
திரளான மாணவ மணவிகள் பேரணியில் கலந்துகொண்டனர். மாணவர்கள் விழிப்புணர்வுப் வாசகம் கொண்ட உடையினை அணிந்து நடனம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பத்தினார்கள்.
தொடர்ந்து, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பண்டைய தமிழர்களின் எழுத்து முறையான தமிழ் கல்வெட்டுகளின் சிறப்பை உலகறியச் செய்யும் விதமாக நடைபெற்ற, மாபெரும் தமிழி கல்வெட்டு உலக சாதனை நிகழ்வில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் பேசினார்.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் மாதவன், மாநகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி, மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராமு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




