Close
அக்டோபர் 8, 2026 7:32 மணி

இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க மாவட்டத்தில் 10ம் தேதி சிறப்பு முகாம்

இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 10ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையம் மூலம் ஏற்கனவே, வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நிறைவடைந்துள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களாகத் தகுதி பெற்றவர்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கும் ஆய்வுக் கூட்டம் நடத்தி உரிய அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களாகத் தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்காக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரும் 10ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

முதல்முறை, இளம் வாக்காளர்களின் வாக்காளர் பட்டியல் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் பெருநகரங்களுக்குச் சிறப்பு கவனம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top