தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் வெற்றிப் பயண திட்டம் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
ஏற்கனவே இருந்த மகளிர் விடியல் பயன திட்டத்தை மாற்றி வெற்றி பயணம் திட்டம் என்ற பெயரில் தமிழக முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது இந்த திட்டத்தின் மூலம் அனைத்து மொபஸல் பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணம் செய்வதற்கான நடைமுறை கொண்டு வரப்பட்டது. ஆனால், ஒரு சில இடங்களில் போக்குவரத்து கழக ஓட்டுநர்களால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து சோழவந்தான் அருகே குருவித்துறையிலிருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் செல்வதற்காக வந்த நிலையில் மாரியம்மன் கோவில் முன்பு இருந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் பேருந்தை நிறுத்த சொல்லி கைகாட்டியும் அதை சட்டை செய்யாமல் ,ஓட்டுநர் நிற்காமல் சென்று விட்டார்.
அதனைத் தொடர்ந்து, திருவேடகம் அடுத்து சாய்பாபா கோவில் அருகே 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இருந்த நிலையில் அங்கேயும் நிறுத்தாமல் பேருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நிலக்கோட்டையில் இருந்து மதுரை ஆரப்பாளையம் சென்ற மொபஷல் பேருந்தில் பெண்கள் ஏறி சென்றதாக கூறப்படுகிறது.
தமிழக அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான வெற்றிப் பயணத் திட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் செயல்படும் போக்குவரத்து துறை ஓட்டுநர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்து உரிய விசாரணை செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெண்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், திருவேடகம் சாய்பாபா கோவில் அருகே இந்த பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் சோழவந்தான் அரசு போக்குவரத்து மேலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறியதாக கூறப்படுகிறது.
பெண்களுக்கான சிறப்பு திட்டங்களில் ஒன்றான இந்தத் திட்டத்தை சீர்குலைக்க நினைக்கும் இது போன்ற பணியாளர்களால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை உள்ளதால் உரிய விசாரணை செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




