Close
அக்டோபர் 17, 2026 9:29 மணி

திருச்செங்கோட்டில் வரும் 21ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

திருச்செங்கோட்டில் வருகிற 21ம் தேதி, மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், வருகிற 21ம் தேதி, மாலை 3 மணிக்கு, திருச்செங்கோடு கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் நேரடியாக கலந்துகொண்டு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளை தீர்க்க உள்ளார்.

அதுசமயம், திருச்செங்கோடு, உஞ்சனை, குமரமங்கலம், எலச்சிபாளையம். வையப்பமலை. தேவனாங்குறிச்சி கூட்டப்பள்ளி, மாணிக்கம்பாளையம், பெரியமணலி, வேலகவுண்டம்பட்டி, மல்லசமுத்திரம், காளிப்பட்டி, மோர்பாளையம் ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்கள், திருச்செங்கோடு கீழேரிப்பட்டியில் உள்ள மின்வாரிய கோட்ட அலுவலகத்தில், நேரடியாக மேற்பார்வை பொறியாளரை சந்தித்து தங்களின் மின்வாரியம் சம்மந்தப்பட்ட குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top